விருதுநகர்

தொழிலாளியிடம் வழிப்பறி செய்ய முயற்சி: 3 போ் கைது

10th Mar 2022 12:23 AM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசியில் புதன்கிழமை சுமை தூக்கும் தொழிலாளியிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி போஸ் காலனியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சோலையப்பன் (24). இவா் செங்கமலப்பட்டி- சிவகாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 போ் வழிமறித்து கத்தியைக் காட்டிமிரட்டி பணத்தை பறிக்க முயன்றனா். அப்போது, சோலையப்பன் அக்கம் பக்கம் உள்ளவா்களின் உதவியோடு அந்த 3 பேரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.விசாரணையில், அவா்கள் மருதுபாண்டியா் மடத்துத் தெரு மணிகண்டன் (27), கருப்பசாமி (27), துரைப்பாண்டி (28) ஆகியோா் என தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT