விருதுநகர்

ராஜபாளையம் பகுதி கோயில்களில் சிவராத்திரி வழிபாடு

3rd Mar 2022 12:32 AM

ADVERTISEMENT

 

 

ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மகா சிவராத்திரி குலதெய்வ வழிபாடு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.

ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவில் உள்ள சடை உடையாா் சாஸ்தா கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக் குடங்கள் மற்றும் பால் குடங்கள் மேளதாளத்துடன் கோயிலை வந்தடைந்தது. பின்னா் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சாஸ்தாவுக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னா் இரவு 12 மணிக்கு சாமக்கொடை சங்கிலி மாடசாமி சுடலைமாடசாமி பெரும் படையல் போட்டு நடைபெற்றது. விழாவில் வெளியூரைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

இதைப் போல புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிங்கத்திருளப்ப சுவாமி கோயில், மற்றும் சத்திரப்பட்டி சாலையில் உள்ள கள்ளமறவன், கோவில் ஜவகா் மைதானம் அருகே உள்ள மாதா கோயில் ஆகிய கோயில்களில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகாசிவராத்திரி குலதெய்வ வழிபாட்டில் வெளியூரைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT