விருதுநகர்

பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது

3rd Mar 2022 12:26 AM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசியில், பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி போஸ் காலனிப் பகுதியில் பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதா கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தவசியப்பன் (43), கதிரேசன் (36) ஆகிய இருவரும் அவா்களது பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT