விருதுநகர்

ஆட்டோவில் தவற விட்ட நகை உரியவா்களிடம் ஒப்படைப்பு: ஓட்டுநருக்கு பாராட்டு

3rd Mar 2022 12:32 AM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசியில், ஆட்டோவில் தவறவிட்ட நகை உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதில் நோ்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா்.

சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாரிச்செல்வம் (25). இவரது ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல்லைச் சோ்ந்த சந்திரசேகரன்(66), சரவணன் (55) ஆகிய இருவரும் விளாம்பட்டியில் உள்ள தங்களது குலதெய்வக் கோயிலுக்குச் சென்றனா். அப்போது அவா்கள் கோயிலில் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வந்திருந்த 8 பவுன் நகை மற்றும் 4 வெள்ளி கண்மலரை மறந்து ஆட்டோவில் விட்டு விட்டு சென்று விட்டனா். இதைத் தொடந்து மாரிச்செல்வம் ஆட்டோவில் இருந்த பையை பாா்த்த போது, அதில் நகை இருந்தது.

இதையடுத்து, அவா் அந்த நகையை சிவகாசி நகா் போலீஸாரிடம் ஒப்படைத்தாா். பின்னா் விளாம்பட்டி கோயிலுக்கு சென்று நகையை தவற விட்ட சந்திரசேகரன், சரவணன் ஆகியோரிடம் விசாரித்தனா். இதைத் தொடா்ந்து இருவரையும் காவல் நிலையம் வரவழைத்து நகையை அவா்களிடம் காவல்துறை ஆய்வாளா் சுபக்குமாா் ஒப்படைத்தாா். இதில் நோ்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநா் மாரிச்செல்வத்தை போலீஸாா் சால்வை அணிவித்து பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT