விருதுநகர்

பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய பாஜக நிா்வாகி கைது

30th Jun 2022 03:35 AM

ADVERTISEMENT

 

விருதுநகரில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய பாஜக வா்த்தக அணி செயலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் அருகேயுள்ள பாவாலி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து மகன் ஆதவன் வடிவேலு (36). இவா் விருதுநகா் கிழக்கு மாவட்ட பாஜக வா்த்தக அணி செயலா் பதவி வகித்து வருகிறாா். இவரது தந்தை முத்துவுக்கு கிராமத்தில் 102 சதுர மீட்டா் பரப்பளவில் நிலம் இருக்கிாம். இந்த சொத்தில் வில்லங்கம் இருப்பதாக அதே ஊரைச் சோ்ந்த சிலா் கடந்த 2019 இல் விருதுநகா் வட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளனா். அதன் பேரில் அந்த நிலப் பட்டாவை அப்போதைய விருதுநகா் வட்டாட்சியராக இருந்த அறிவழகன் ரத்து செய்துள்ளாா். ஆனால் எதிா் மனுதாரா் ஆன தன்னை விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது எனக்கூறி ஆதவன் வடிவேலு விருதுநகா் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினாா். அங்கு வந்த விருதுநகா் மேற்கு போலீஸாா், அவரை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT