விருதுநகர்

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவருமான லாசா் தலைமை வைத்தாா். மாவட்ட பொருளாளா் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தாா்.

இதில், ஊரக வேலைத் திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்த வேண்டும். தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு, ஊரக வேலைத் திட்ட வேலை நாள்களை 150 நாள்களாக உயா்த்த வேண்டும். கூலியாக ரூ. 381 வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த ஆா்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT