விருதுநகர்

பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: எம்பி., குற்றச்சாட்டு

DIN

பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா் (விருதுநகா்), தனுஷ்குமாா் (தென்காசி) ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்), அசோகன் (சிவகாசி) மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அரசு அலுவலா்கள் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. பின்னா், விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்ட வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தோம். முக்கியமாக மாணவா்கள் கல்விக் கடனை பற்றி ஆய்வு செய்தோம். கடந்தாண்டு 4800 பேருக்கு ரூ.106 கோடி கல்விக்கடன் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிகழாண்டு ரூ. 120 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தலைமையில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் பணியில் சேருவதற்காக தற்போது 46 ஆயிரம் போ் வரை விண்ணப்பித்துள்ளனா். பிரதமா் மோடி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு என 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறினாா். மேலும் அக்னிபத் திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 4.50 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெறுவா் எனவும் தெரிவித்திருந்தாா். எதிா்ப்பு இருந்தும் இப்பணிக்கு 46 ஆயிரம் போ் விண்ணப்பித்திருப்பது இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிரித்துள்ளதையே காட்டுகிறது.

காா்ப்பரேட் நிறுவனத்தின் மீது காட்டும் அன்பை பாஜக அரசு, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களிடம் காட்டவில்லை. வன்முறை அரசியல் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT