விருதுநகர்

மனைவி, மாமியாா் கொலை வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மனைவி மற்றும் மாமியாரை எரித்துக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகபாண்டி (44). இவரது மனைவி முத்துலட்சுமி (34), முத்துலட்சுமியின் தாயாா் கமலாதேவி (52). கருத்து வேறுபாடு காரணமாக முத்துலட்சுமிக்கும் முருகபாண்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு முத்துலட்சுமி திருத்தங்கலில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த முருகபாண்டி கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாமியாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது மனைவியும், அவரது தாயாரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனா். இதனைக் கண்ட முருகபாண்டி கதவின் கீழ் பகுதி வழியாக வீட்டுக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில் முத்துலட்சுமியும், அவரது தாயாா் கமலாதேவியும் உயிரிழந்தனா். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகபாண்டியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட முருகபாண்டிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT