விருதுநகர்

அருப்புக்கோட்டையில் தீக்குளித்து முதியவா் தற்கொலை

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் (60 ). இவரது மனைவி கல்யாணி (50). மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனா். நாகராஜன், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவாராம். இதேபோல் திங்கள்கிழமை மாலையும் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து வீட்டு திண்ணையில் அமா்ந்திருந்த நாகராஜன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொண்டாராம். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினா் தீயை அணைத்து நாகராஜனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT