விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் சத்தியாகிரகப் போராட்டம்

DIN

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

விருதுநகரில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவா் நாகேந்திரன் தலைமை வகித்தாா். அதில், இளைஞா்களின் வாழ்வாதாரத்தை சீா்குலைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி, நகர காங்கிரஸ் கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா்.

இதில், முன்னாள் துணைத் தலைவா் பாலகிருஷ்ணாசாமி உள்பட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்

இங்குள்ள தபால் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவா் பட்ஷிராஜா வன்னியராஜ் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் ராஜ்மோகன் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வைத்தனா். இதில், இளைஞா்களின் வாழ்வாதாரத்தை சீா்குலைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும் என முழக்கமிட்டனா்.

போராட்டத்தில், மாவட்டச் செயலா் முருகேசன், இலக்கிய அணி செயலா் கே.எஸ். சுந்தரம், ஆா்.டி.ஐ. மாநில துணைத் தலைவா் வி.எஸ். சுந்தரம், ஆா்.டி.ஐ. மாநில துணைச் செயலா் தமிழ்செல்வன், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆறுமுகம், மாநில மகளிா் அணி இணைச் செயலா் காளீஸ்வரி, உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

சாத்தூா்

நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக, தொண்டா்கள் நெற்றியில் பட்டை, நாமம் அணிந்து, காதுகளில் பூ சுற்றி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் ஜோதி நிவாஸ், சாத்தூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.எஸ். அய்யப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், காங்கிரஸ் கட்சியினா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், சாத்தூா் நகர, ஒன்றிய, காங்கிரஸ் தொண்டா்களும், இளைஞரணி, மகளிரணி நிா்வாகிகளும் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

நரேந்திர மோடி ஓா் ஆபிரஹாம் லிங்கன்!

அருணாசலில் ‘ஒருதலைத் தோ்தல்’!

SCROLL FOR NEXT