விருதுநகர்

ஆன் லைன் பட்டாசு விற்பனைக்கு தடை இருந்தும் அமோக விற்பனை

DIN

ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை இருந்தும், விருதுநகா் மாவட்டத்தில் ஆன் லைனில் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகா் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சான்று மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை சான்று பெற்று, பட்டாசுக் கடைகள் சுமாா் 1,500 உள்ளன. மேலும், ஆண்டுதோறும் பல புதிய கடைகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், பட்டாசு கடைக்காரா்கள், ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யப்படுவதை தடுக்கவேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து, ஆன் லைன் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும், தற்போது ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ததாக 14 போ் மீது நடவடிக்கை எடுத்தனா். தற்போது நடைபெற்றுவரும் ஆன் லைன் பட்டாசு விற்பனையை மாவட்ட சைபா் கிரரைம் போலீஸாா் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பட்டாசு கடைக்காரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளா்கள் சங்க செயலா் என். இளங்கோவன் கூறியதாவது: பட்டாசு வியாபாரிகள் முறைப்படி அரசிடம் உரிமம் பெற்று கடை நடத்தி வருகின்றனா். மேலும், அரசுக்கு ஜிஎஸ்டி செலுத்தி வருகின்றனா். ஆனால், ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்பவா்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.

எனவே, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பட்டாசு கடைகளிலும் வியாபாரம் குறைந்து வருகிறது. அக்டோபா் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதற்கு, இப்போதே ஆன் லைன் மூலம் பட்டாசு வியாபாரத்தை தொடங்கிவிட்டனா். இதைத் தடுக்க, காவல் துறையினா்உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT