விருதுநகர்

பாலியல் வழக்கு: கல்லூரி தாளாளா் ஜாமீன் மனு விசாரணை ஜூன் 29-க்கு ஒத்திவைப்பு

28th Jun 2022 12:09 AM

ADVERTISEMENT

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் தாஸ்வின் ஜான்கிரேஸ் (40). இவா், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், கைப்பேசி மூலம் மாணவிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், இவா் ஜாமீன் கோரி அளித்திருந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT