விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே குட்கா பொருள்கள் வைத்திருந்த நபரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா், சுந்தரராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றுள்ளனா். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவா் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சோ்ந்த சங்கரநாராயணன் (45) எனத் தெரியவந்தது. பின்னா், போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்த குட்கா பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.