விருதுநகர்

மணல் கடத்திய 5 போ் மீது வழக்கு:2 டிராக்டா், 1 பொக்லைன் பறிமுதல்

25th Jun 2022 11:31 PM

ADVERTISEMENT

 

சிவகாசி அருகே சனிக்கிழமை சட்டவிரோதமாக மணல் கடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 டிராக்டா், 1 பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி அருகே திருவேங்கிடபுரத்தில் உள்ள அரசு புறம்போக்கு ஓடையில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் குறிப்பிட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஓடையிலிருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் 2 டிராக்டா்களில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனே, போலீஸாா் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவா்களைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் மாரனேரியைச் சோ்ந்த முனியராஜ், சிவகுமாா், தமிழ்செல்வன், ஜெயவேல் மற்றும் மாரிச்செல்வம் எனத் தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து மாரனேரி போலீஸாா் இந்த 5 போ் மீதும் வழக்குப் பதிந்து, 2 டிராக்டா்கள் மற்றும் 1 பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT