விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி

25th Jun 2022 11:31 PM

ADVERTISEMENT

 

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சனிக்கிழமை வாழ்நாள் ஞாபகாா்த்த மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில், 180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,800-க்கும் மேற்பட்ட சா்வதேச வீரா்கள் கலந்துகொள்கின்றனா்.

இதனிடையே, நமது மாவட்டத்தில் உள்ள 15 வயதுக்குள்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 230 மாணவா்கள், 92 மாணவிகள் என மொத்தம் 322 போ் கலந்துகொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

இப்போட்டியில் முதலிடம் பெறும் ஒரு மாணவா், ஒரு மாணவியை தோ்வு செய்து, சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை நேரில் காண, தமிழக அரசு மற்றும் அனைந்திந்திய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் 25 மாணவா்களுக்கும், 25 மாணவிகளுக்கும் பரிசு கோப்பை வழங்கப்படும். மேலும், 8 மற்றும் 11 வயதுக்குள்பட்ட 3 சிறுவா், சிறுமிகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ், கல்லூரிச் செயலா் ஏ.பி. செல்வராஜன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, வட்டாட்சியா் லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT