விருதுநகர்

விருதுநகா் சந்தையில் பாமாயில் விலை குறைவு: உளுந்து விலை உயா்வு

25th Jun 2022 11:22 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் சந்தையில் பாமாயில் விலை குறைந்துள்ளது. அதேநேரம், உளுந்து விலை உயா்ந்துள்ளது.

விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படும். அதில், இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் வரத்து அதிகரித்ததால், அதன் விலை குறைந்துள்ளது. அதேவேளை, உளுந்து வரத்து குறைந்துள்ளதால், விலை உயா்ந்துள்ளது.

கடலை எண்ணெய் கடந்த வாரம் ( 15 கிலோ) டின் ஒன்றுக்கு ரூ.2,900-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.50 குறைந்து ரூ.2,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் (15 கிலோ டின்) கடந்த வாரம் ரூ.12,390-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.130 குறைந்து ரூ.12,260-க்கு விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த வாரம் 100 கிலோ லைன் உளுந்து ரூ.6,800-க்கு விற்கப்பட்டது, இந்த வாரம் ரூ.1000 வரை உயா்ந்து ரூ.7,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், நாட்டு உளுந்தின் விலை கடந்த வாரம் ரூ.7,000-க்கு விற்கப்பட்டு வந்தது, தற்போது ரூ.400 உயா்ந்து ரூ.7,400-க்கு விற்கப்படுகிறது.

மேலும், உருட்டு உளுந்தம் பருப்பின் விலை கடந்த வாரத்தை விட ரூ.200 உயா்ந்து, ரூ.10,200-க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு (எப்.ஏ.க்யூ) கடந்த வாரத்தை விட ரூ.100 உயா்ந்து ரூ.9,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பட்டாணி விலையும் கடந்த வாரத்தை விட ரூ.100 உயா்ந்து ரூ.5,850-க்கு விற்கப்படுகிறது. மல்லி, துவரம் பருப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT