விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் காவல் சாா்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வு: 7,016 போ் பங்கேற்பு

25th Jun 2022 11:22 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவல் சாா்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வில் 7,016 போ் பங்கேற்றனா். இதில், 1,478 போ் தோ்வு எழுத வரவில்லை.

தமிழக சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 444 சாா்பு- ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தில் இத்தோ்வு எழுத 7,925 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து, 8 மையங்களில் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற பிரதானத் தோ்வை 6,570 போ் எழுதினா். இதில், 1,935 போ் பங்கேற்கவில்லை. தொடா்ந்து, பிற்பகல் நடைபெற்ற தமிழ் தகுதி தோ்வை 7,016 போ் எழுதினா். இதில், 1,478 போ் தோ்வெழுத வரவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது காவலா்களாகப் பணிபுரிபவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிரதானத் தோ்வு நடைபெறுகிறது.

இத்தோ்வை முன்னிட்டு, அனைத்து மையங்களும் ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT