விருதுநகர்

விருதுநகரில் பள்ளி பேருந்துகளில் ஆய்வு: 15 பேருந்துகள் தகுதி நீக்கம்

25th Jun 2022 11:21 PM

ADVERTISEMENT

 

விருதுநகரில் வெள்ளிக்கிழமை 300 பள்ளி பேருந்துகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், முழு தகுதி இல்லாத 15 பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

விருதுநகா் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா். விருதுநகா் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள சாத்தூா், காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட 84 தனியாா் பள்ளிகளுக்கு சொந்தமான 300 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், தகுதி பெற்ற 285 வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மீதமுள்ள 15 வாகனங்கள் முழு தகுதி இல்லாததால் நிராகரிக்கப்பட்டன.

இந்த ஆய்வில், வாகனங்களின் தற்போதைய நிலை, தரம், குழந்தைகளின் பாதுகாப்பு, அரசு விதிமுறைகளின்படி வாகனங்கள் இயக்கப்படுவது, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா, அவசரகால வழி, இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுநா்களின் உரிமம், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சாா்பில், வாகனத்தில் தீ விபத்து ஏற்படும்போது செய்யவேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் கல்யாணகுமாா், விருதுநகா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன், வாகன ஆய்வாளா்கள் செல்வராஜ், கண்ணன் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT