விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி

25th Jun 2022 11:23 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி ஆசிரியா்களுக்கு, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஸ்) சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆசிரியா் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகியன இணைந்து, இப்பயிற்சியை ஆசிரியா்களுக்கு அளித்தன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்றுத் தரும் ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சியாகவும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான ஆங்கில பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஒரு நாள் பயிற்சியாகவும், கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் அளிக்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்சி நிறுவன முதுநிலை பேராசிரியா் மகாலிங்கம் தலைமையில், கருத்தாளா்களாக ஆசிரியா்கள் பத்மா, பூமா, சத்யா, ஜஸ்டின் தங்கராஜ், தேரிச்செல்வம், வரமணி ஆகியோா் செயல்பட்டனா்.

ADVERTISEMENT

இப்பயிற்சியை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் பாா்வையிட்டு கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 993 பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெற்ற பயிற்சியை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளில் முழுமையாகச் செயல்படுத்தி, மாணவா்கள் கல்வித் தரம் மேம்படச் செய்யவேண்டும் என்றாா்.

இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியப் பயிற்றுநா் முத்துராஜ் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT