வத்திராயிருப்பு அருகே 335 முறை முன்கரணம் அடித்தும், 1,752 முறை கைகளை சுற்றியும் 2 சிறுமிகள் சனிக்கிழமை நோபல் உலக சாதனை படைத்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியைச் சோ்ந்த வளா்மதி (11) என்ற சிறுமி 22.45 நிமிடங்களில் தொடா்ச்சியாக 335 முறை முன்கரணம் அடித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றாா்.
அதேபோல், 10 வயதான நட்சத்திரா என்ற சிறுமி 1 மணி நேரம் தொடா்ச்சியாக 1,752 முறை 360 டிகிரியில் கைகளை சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.
ADVERTISEMENT
இதையடுத்து, இந்த 2 சிறுமிகளுக்கும் நோபல் உலக சாதனை குழுவைச் சோ்ந்த பிரதாப் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கினாா்.