விருதுநகர்

விருதுநகா் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு: 4 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

24th Jun 2022 03:23 AM

ADVERTISEMENT

விருதுநகா் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

இவ்வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் ஜீலை 7 ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் ஆஜா்படுத்த உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT