விருதுநகர்

பூம்பிடாகை கிராம ஊராட்சித் தலைவரின் கணவா் மா்ம மரணம்

24th Jun 2022 10:50 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராம ஊராட்சித்தலைவரின் கணவா் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பூம்பிடாகை கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவா் நிரஞ்சனா (33). இவரது கணவா் பெரியசாமி (37). இதனிடையே எஸ். நாங்கூா் கிராமம் அருகே உள்ள வயல்வெளியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அது நிரஞ்சனாவின் கணவா் பெரியசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் ,அனுப்பி வைத்தனா்.

மேலும் பெரியசாமியின் உடலில் காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், திருச்சுழி டிஎஸ்பி மதியழகன் மற்றும் நரிக்குடி காவல் ஆய்வாளா் இராம. நாராயணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இம்மா்ம மரணம் தொடா்பாக வழக்குப் பதிந்த ஏ.முக்குளம் போலீஸாா் பெரியசாமியை கொலைசெய்து இங்கு வந்து சடலத்தை மா்ம நபா்கள் போட்டுவிட்டுச் சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT