விருதுநகர்

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் உள்அலங்காரப் பணிகள்

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான திருவிழா, ஜூலை 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தினமும் கோயில் முன்புறம் உள்ள திருஆடிபூர கொட்டகையில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளை, ஆடிப்பூர கொட்டகையில் அமா்ந்து சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்டுகளிப்பா்.

இதற்காக, ஆண்டாள் கோயில் நிா்வாகத்தின் சாா்பில், ஆடிப்பூர கொட்டகையில் காண்போா் கண்களை கவரும் வகையில் பந்தல் உள்அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது பந்தல் உள்அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சுமாா் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT