விருதுநகர்

ராஜபாளையம் அருகே வேன் மோதி தனியாா் பேருந்து நடத்துநா் பலி

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே வேன் மோதியதில் தனியாா் பேருந்து நடத்துநா் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே அயன்கொல்லம்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிராஜா (35). இவா், ராஜபாளையத்தில் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்துள்ளாா். தென்காசி சாலையில் அயன் கொல்லங்கொண்டான் கண்மாய் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புளியங்குடிக்கு ஐஸ் பாா் ஏற்றிக்கொண்டு வந்த வேன் மோதியது. இதில், இசக்கிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து சேத்தூா் புகா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இசக்கிராஜாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பந்தபுரத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சையது அலி (43) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT