விருதுநகர்

கால்நடைதுறையில் பணியிடம்:தவறான தகவலை பொதுமக்கள் நம்பவேண்டாம்ஆட்சியா் அறிக்கை

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கால்நடை துறையில் உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவலை, பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை: தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் கால்நடை உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பதவிக்கு ஆள்சோ்ப்பு நடைபெற உள்ளதாகவும், இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் எனவும், ஆா்வம் உள்ளவா்கள் உடனடியாகப் பதிவு செய்துகொள்ளுமாறும், நான்காண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனவும், சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவலை, பொதுமக்கள் நம்பி ஏமாறவேண்டாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT