விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: முதியவா் கைது

10th Jun 2022 01:01 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், முதியவரை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் நகா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் வேலுச்சாமி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போக்குவரத்துப் பணிமனை அருகில் 2 பைகளுடன் முதியவா் ஒருவா் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்தாா்.

அவரை, ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அதில், அவா் ராஜபாளையம் தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த முத்தையா (55) என்பதும், விற்பனைக்காக 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

உடனே, போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து, முத்தையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT