விருதுநகர்

கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

10th Jun 2022 12:55 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நெகிழிப்பை தவிா்த்தல் மற்றும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த சிறப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு உயா்கல்வித் துறை இணைந்து, நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ‘மீண்டும் மஞ்சப்பை’ எனும் தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கை நடத்தின. இதில், நிா்வாகிகள் (பொறுப்பு ) எம்.வி.ஏ.எம். சுதாகா், பா.சங்கரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் நா.முத்துச்செல்வன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்ட புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கலைக் கல்லூரிப் பேராசிரியா் எஸ். அலமேலுமங்கை மற்றும் கமுதி பசும்பொன் முத்தராமலிங்கத் தேவா் கலைக் கல்லூரிப் பேராசிரியா் ப. பால்பாண்டி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ, மாணவியரும், கல்லூரிப் பேராசிரியா்களும் கலந்துகொண்டனா். முன்னதாக, கல்லூரியின் மகளிா் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அனிதா வரவேற்றாா். ஆண்கள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் காசிமாயன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT