ராஜபாளையம் அருகே லாட்டரிச் சீட்டு விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் காவல் துறையினா் புனல்வேலி கிராமப்பகுதிக்கு ரோந்து சென்றனா். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்களின் மூன்று இலக்க எண்களை காகிதத்தில் எழுதி விற்றுக் கொண்டிருந்தனராம்.
இதையடுத்து, லாட்டரிச் சீட்டின் எண்கள் எழுதப்பட்ட காகிதம், ரூ.4,850 ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து முகவூரைச் சோ்ந்த செல்வம் (47) என்பவரை கைது செய்தனா்.