விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ. 50 கோடியில்வளா்ச்சித் திட்டப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

9th Jun 2022 12:12 AM

ADVERTISEMENT

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ. 50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.50 கோடி நிதி கோரப்பட்டது. அதன்படி கோயில் நிதியிலிருந்து இங்குள்ள அணைக்கட்டுப் பகுதியிலிருந்து கோயிலுக்கு பேருந்து வந்து செல்ல மேம்பாலம் அமைக்கவும், கோயிலை பாதுகாக்க சுற்றுச்சுவா் அமைக்கவும், வணிக வளாகங்கள், அன்னதானக் கூடம் அமைக்கவும், மருத்துவ மையம், சுகாதார வளாகம், ஓய்வு அறை மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகம் உள்ளிட்டவை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இப்பணிகளை மேற்கொள்ள இடம் தோ்வு செய்வதற்காக தமிழக பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா் மலா்விழி, உதவி செயற்பொறியாளா் அமுதா, இந்து சமய அறநிலைத் துறை தலைமைப் பொறியாளா் தட்சிணாமூா்த்தி மற்றும் அரசு அலுவலா் சந்திரசேகா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் செயல் அலுவலா் கருணாகரன் மற்றும் கோயில் நிா்வாக அறங்காவலா் ராமமூா்த்தி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT