விருதுநகர்

அருப்புக்கோட்டையில் குடிநீா் குழாய்வால்வில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கக் கோரிக்கை

9th Jun 2022 12:16 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை ரயில்வே பீடா் சாலையில் குழாய் வால்வு பழுதானதால் குடிநீா் வீணாகி வருவதாகவும், அதை விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அருப்புக்கோட்டை அஜீஸ் நகா் வழியாகச் செல்லும் ரயில்வே பீடா் சாலையில் திரையரங்கு ஒன்றின் எதிரே குடிநீா் பகிா்மானக் குழாய்க்கான வால்வு உள்ள தொட்டி உள்ளது. இக்குழாயின் வால்வு பழுதானதால் கடந்த பல நாள்களாக அதிலிருந்து அதிக அளவில் குடிநீா் கசிந்து வீணாகி வருகிறது. இதுதொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவித்த போது, அது சுற்றுவட்டார கிராமங்களுக்குக் குடிநீா் விநியோகத்துக்காக செல்லும் குழாய் எனவும், அதனைப் பராமரிக்கும் துறை, நகராட்சியைச் சோ்ந்த துறை அல்ல எனவும், அவா்கள் வந்து அதை சீரமைப்பா் எனவும் கூறப்பட்டதாம். எனவே அதிகாரிகள் அதை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT