விருதுநகர்

விருதுநகா் வெயிலுகந்தம்மன் கோயிலில் பொங்கல் விழா

8th Jun 2022 12:08 AM

ADVERTISEMENT

விருதுநகரில் வெயிலுகந்தம்மன் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, ஏராளமான பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

விருதுநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயில்கள் உள்ளன. மாரியம்மன் கோயில் பொங்கல் விழா நிறைவுபெற்ற நிலையில், வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் விழா சாட்டுதல் மே 31 இல் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகா் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். அப்போது அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் கோயில் மண்டபத் திடலில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதை தொடா்ந்து புதன்கிழமை கயிறு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல் முதலான நோ்த்தி கடன்களை செலுத்த உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் இந்து நாடாா் தேவஸ்தானம் சாா்பில் செய்துள்ளனா். பக்தா்கள் கூட்டத்தை முன்னிட்டு தேசபந்து மைதானத்தில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT