வத்திராயிருப்பு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தை அடுத்துள்ள மாத்தூா் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
வத்திராயிருப்பு வட்டாட்சியா் உமா மகேஸ்வரி உள்ளிட்ட வருவாய்த்துறையினா் அங்கு சென்று சோதனையிட்டனா். இதில் அந்த ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டில் 32 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.