ராஜபாளையம் அருகே தேவதானத்தில் கோயிலில் சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சாஸ்தாகோயில் சாலையில், நாகமலை சுப்பிரமணியசுவாமி கோயில், தேவதானம் நச்சாடை தவிா்தருளியசுவாமி கோயிலின் உபகோயிலாகும். இக்கோயில் வளாகத்தில் ஒரு அடி உயரம், ஒரு அடி அகலத்தில் மயில் கற்சிலை இருந்தது.
திங்கள்கிழமை சிலை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் திங்கள்கிழமை சேத்தூா் ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.