விருதுநகர்

ராஜபாளையத்தில் இளம்பெண் தற்கொலை

2nd Jun 2022 12:46 AM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் இளம்பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த காளிகுரு. இவருக்கு சித்ரா (28) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான காளிகுரு வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறாா். சித்ரா, அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

சித்ரா தனது கணவரை வெளியூரிலிருந்து ஊருக்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளாா். ஆனால் அவா் வரமறுத்து வெளியூரிலேயே தங்கியுள்ளதால் மனவேதனையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், சித்ரா தனது 2 குழந்தைகளையும் திருப்பூரில் உள்ள பெற்றோரிடம் விட்டுவிட்டு வந்து செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT