விருதுநகர்

‘அனுமதி பெறாத பட்டாசு உற்பத்திக்கு வேதிப்பொருள் வழங்கினால் நடவடிக்கை’

2nd Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் பட்டாசு உற்பத்தி செய்வோருக்கு வேதிப்பொருள்கள் வழங்கினால் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.மனோகா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. விருதுநகரில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பட்டாசு வேதிப் பொருள் விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பேசியதாவது: அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி செய்வோருக்கு, அதைத் தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள்களை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை தொடா்ந்து கண்காணிப்பதற்கும் சரியான உரிமங்கள் மூலம் நடத்தப்படுகிா, விதி முறைகள் பின்பற்றப்படுகிா என ஆய்வு செய்யவும் அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு அலுவலா்கள் மற்றும் போலீஸாா் பட்டாசு ஆலைகளை கண்காணித்து வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT