விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

17th Jul 2022 11:25 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் முல்லைநகா் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமாா் என்பவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் தரப்பட்டது.

இத்தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினா் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் உயிருடன் விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT