விருதுநகர்

விருதுநகரில் பிளம்ஸ், ரம்பூட்டான் பழங்கள் விலை உயா்வு

17th Jul 2022 11:26 PM

ADVERTISEMENT

விருதுநகரில் காஷ்மீா் பிளம்ஸ், ரம்பூட்டான் பழங்களின் வரத்து அதிகமிருந்தும் அவற்றின் விலை உயா்ந்துள்ளது. கிலோ ரூ.240 க்கு விற்கப்படுகின்றன.

விருதுநகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை கொடைக்கானல் பிளம்ஸ் விற்பனைக்கு வந்தது. அதன் பின்னா் வரத்து இல்லாததால், தற்போது காஷ்மீா் பிளம்ஸ் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.

அதேபோல், குற்றாலம் மற்றும் கேரள பகுதிகளிலிருந்து ரம்பூட்டான் பழங்கள் வரத்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் இந்த பழங்கள் கிலோ ரூ. 240 க்கு விற்கப்படுகின்றன. மருத்துவ குணங்கள் கொண்ட இப்பழங்களை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டினாலும், விலை அதிகம் காரணமாக குறைந்த அளவுக்கே வாங்கிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT