விருதுநகர்

விருதுநகரில் காவலா் தோ்வுக்கு ஜூலை 20 முதல் இலவச நேரடி பயிற்சி

17th Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

விருதுநகா் வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் காவலா் தோ்வுக்கான இலவச நேரடி பயிற்சி ஜூலை 20 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டிதெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலைக்காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி ஆகும். வயது உச்சவரம்பு 31 (வயது தளா்வு உண்டு), ஆக. 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக ஜூலை 20 முதல் நேரடியாக நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு நேரடியாக பயிற்சி பெறவிரும்பும் மனுதாரா்கள், மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT