விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞா் தற்கொலை

7th Jul 2022 02:48 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் வயிற்றுவலியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பண்டிதன்பட்டி காலனி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன்(27). டிப்ளமோ பட்டதாரியான இவா், ராஜபாளையத்தில் உள்ள தனியாா் பால்பண்ணையில் வேலைபாா்த்து வந்தாா். வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ராஜேஸ்வரன் கடந்த 6 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி இரவு வயிற்று வலியால் விஷம் குடித்த ராஜேஸ்வரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT