விருதுநகர்

மணல் திருட்டு: 2 டிப்பா் லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

7th Jul 2022 02:50 AM

ADVERTISEMENT

 

சிவகாசி அருகே மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய 2 டிப்பா் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

வடமலாபுரம் அா்ஜுனா நதிப்படுகையில் கீழத்திருத்தங்கல் கிராம நிா்வாக அலுவலா் உமாவதி தலைமையில் வருவாய்துறையினா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் 2 டிப்பா் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா், கோவிந்த நல்லூா் வைரமுத்து, தங்கமுனியாண்டி, ரவி கண்ணணன், கருணாகரன், தங்கராஜ் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT