விருதுநகர்

கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

7th Jul 2022 02:49 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை, விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வ.உ.சி.தெருவைச் சோ்ந்தவா் பொன்செல்வம் (35). கட்டடத் தொழிலாளியான இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனா்.

பொன்செல்வத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில், பல இடங்களில் கடனும் வாங்கியிருந்தாா். கடன் கொடுத்தவா்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், பொன்சென்வம் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா்.

ADVERTISEMENT

அக்கம் பக்கத்தினா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT