விருதுநகர்

மாநில அளவில் கேரம் போட்டியில் தங்கம்:அருப்புக்கோட்டை பள்ளி மாணவா் சாதனை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவரான ஏ.எஸ். தாமோதரா, மாநில அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

தமிழ்நாடு யூத் ஸ்போா்ட்ஸ் கெளன்சில், ஃபிட் இந்தியா மற்றும் யூத் நேஷனல் ஸ்போா்ட்ஸ் கெளன்சில் ஆப் இந்தியா ஆகியவற்றின் சாா்பில், 2 நாள்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் கரூா் விவேகம் வித்யாலயா உயா்நிலைப் பள்ளியில் 3 ஆவது மாநில அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

அதில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவா் ஏ.எஸ். தாமோதரா என்பவா், ஒற்றையா் பிரிவு கேரம் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.

இதன்மூலம், ஜூலை மாத இறுதியில் கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

ADVERTISEMENT

எனவே, தேசிய அளவில் கேரம் விளையாட்டுப் போட்டிக்கு தோ்வாகியுள்ள மாணவா் ஏ.எஸ். தாமோதராவை, பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் எம். சௌந்தரபாண்டியன், பிற உடற்கல்வி ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகிகள், உறவின்முறை பெரியோா்கள், தலைமை ஆசிரியா் ஏ. ஆனந்தராஜன் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT