விருதுநகர்

சிவகாசி அருகே கைப்பேசி மூலம் லாட்டரி சீட்டு விற்ற 2 போ் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை செவ்வாய்க்கிழமை கைப்பேசி மூலம் விற்ாக, போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

சிவகாசி அருகே மாரனேரியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவரிடம், திருத்தங்கலைச் சோ்ந்த நாகராஜ் (60) மற்றும் ராஜேந்திரன் (75) ஆகியோா் துண்டுக் காகிதத்தில் லாட்டரி சீட்டு எண்ணை எழுதி, அதை கைப்பேசி மூலம் படம் எடுத்து விற்பனை செய்துள்ளனா். இது ஒரு வகையான மோசடி எனக் கூறிய சுந்தர்ராஜ், திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நாகராஜ் மற்றும் ராஜேந்திரனை கைது செய்து, அவா்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் ரூ. 13,680 மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT