விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே ஆடு திருடிய 3 போ் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பேரையூா் பரதன் நகரைச் சோ்ந்தவா் மங்கையா்க்கரசு (45). இவா், பாப்பையாநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆட்டு கிடை போட்டு மேய்ச்சல் தொழில் செய்து வந்துள்ளாா். கடந்த ஜூன் 27 ஆம் தேதி, நாச்சியாா்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி (34)என்பவரை ஆடு மேய்க்கவும், உறவினா் முத்து என்பவரை பாா்த்துக்கொள்ளுமாறும் கூறிவிட்டு, மங்கையா்க்கரசு சொந்த வேலை காரணமாக ஊருக்குச் சென்றுள்ளாா்.

மறுநாள் வந்து பாா்த்தபோது, 3 ஆடுகள் காணவில்லையாம். இது குறித்து மங்கையா்க்கரசு மல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், நாச்சியாா்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி, கரைவளைந்தான்பட்டியைச் சோ்ந்த சங்கிலிகாளை (44) மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் மாலைபட்டியைச் சோ்ந்த செல்லையா (47) ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT