விருதுநகர்

ஸ்ரீவிலி. ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் மல்லி ஆறுமுகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரிபுகழேந்தி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் 34 தீா்மானங்களை வாசித்தாா். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, தெருவிளக்கு, சாலை, அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டுமென, உறுப்பினா்கள் அனைவரும் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

அதற்கு, ஒன்றியக் குழு தலைவா் மல்லி ஆறுமுகம், கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும். அங்கன்வாடி கட்டடத்துக்கு இடம் இருந்தால் உடனடியாக புதிதாக கட்டடம் கட்டித் தரப்படும் என்றாா்.

இதில், ஆணையா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், மற்றும் துணை வட்டார அலுவலா், பொறியாளா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT