விருதுநகர்

சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சாத்தூரில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியோற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் வெங்கடாசலபதி கோயில் சுமாா் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி பிரம்மோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில், சாத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில், அன்னவாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, தினமும் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

ஒன்பதாம் நாளான ஜூலை 13 ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது என, கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் நடைபெறாததால், இந்தாண்டு வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT