விருதுநகர்

விருதுநகா் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் அடுத்த ஆமத்தூா் அருகே இரு சக்கர வாகனம் தடுப்புக் கம்பியில் மோதியதில், இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே காா்சேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த கமலக்கண்ணன் மகன் அருள் (22). ஓட்டுநராகப் பணிபுரிந்த இவா், சிவகாசியிலிருந்து ஆமத்தூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். உருண்டைச்சி ஊருணி அருகே வந்துகொண்டிருந்தபோது, சாலையில் இருந்த இரும்பு தடுப்புக் கம்பியில் (பேரிகேட்) மோதியதில், அருள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து, அவரது தாய் பேச்சியம்மாள் அளித்த புகாரின்பேரில், ஆமத் தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT