விருதுநகர்

ராஜபாளையம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 15ஆண்டு சிறை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சைமாரி (49). இவா், கடந்த 2019ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இது தொடா்பாக ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து, இளைஞா் பிச்சைமாரி கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதி பூா்ண ஜெயஆனந்த், இளைஞா் பிச்சைமாரிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT