விருதுநகர்

விருதுநகா், சிவகாசியில் பாஜகவினா் உண்ணாவிரதம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகரில் எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். இதில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதியின்படி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கவேண்டும். சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் ரூ.100 வழங்கவேண்டும். நீட் தோ்வு ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில், அக்கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா். விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சிவகாசி

ADVERTISEMENT

சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, விருதுநகா் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் வி.கே. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இப்போராட்டமானது, காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதில், கட்சியின் ஓ.பி.சி. பிரிவு மாநிலப் பொதுச் செயலா் வி.ஜெ. கிரி, அந்த பிரிவின் விருதுநகா் மாவட்டத் தலைவா் ஆறுமுகம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சுபநாகராஜன், மாநிலப் பொதுச் செயலா் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் கோபால்சாமி, சோழன் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT