விருதுநகர்

மல்லிபுத்தூா், கொடிக்குளம் பகுதிகளில் இன்று மின்தடை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜூலை 6) பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மல்லி, முல்லிக்குளம், முத்துவெங்கடராயபுரம், பண்டிதம்பட்டி, நக்கமங்கலம், அச்சங்குளம், பிளவக்கல் மின்பாதையில் உள்ள பட்டுப்பூச்சி கிழவன்கோயில், பிளவக்கல் அணை, கோவிலாா் அணை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, கோட்டப் பொறியாளா் சின்னத்துரை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT